இதுவரை 13ம் சந்தி மர்மங்களில்,
அத்தியாயம் 1
கதையில் ஒரு பெண் தனது வீட்டுக்கு செல்ல ஆட்டோவில் ஏறுகிறாள். அடைமழைக்குள் வழிமாறி ஆளில்லாத அந்த புதிய இடத்தில் அடுத்த சந்திக்கு சென்று இறங்குகிறாள். வழியில் ஒரு பாலம் மீது ஆட்டோ நிற்கிறது. பின் சரியாகி வீட்டுக்கு செல்கிறாள்.
அடுத்த நாள் அப்பெண் இறந்து விட்டதாகவும், ஆட்டோ பாலத்தில் கிடப்பதாகவும், சாரதி ஆற்றில் இறந்து கிடப்பதாகவும் செய்தி வருகிறது.
அத்தியாயம் 2
அதே நாள் மாலை இந்த செய்தியை வாசிக்கும் 2 இளம் ஊடகவியாலாளர்களில் ஆண், அப்பெண்ணை தனக்கு தெரியுமென்று, அந்த மர்மம் மிக்க, காரணமின்றி செல்லத்தகாத இடத்தை பார்க்க தனது தோழியோடு விரைகிறான். பாலத்தில் இவர்களது வாகனம் நின்று போகிறது.
அத்தியாயம் 3
இவர்கள் பாலத்தில் இருக்கும்போது வேறு யாரோ வருவது கேட்டு ஒளிய, அங்கு ஜீப்பில் வந்த தடியர் கூட்டம் எதிர்பாராத விதமாக அங்கு வந்த போலீசை தாக்கிவிட்டு தப்பிக்கிறது. அவர்கள் சென்றதும், இந்த சப்தம் கேட்டு வரும் போலீஸ் வண்டியில் இருந்து தப்பிக்க அந்த சந்திக்குள்ளேயே சென்று முட்டு சந்து உள்ளதைக் கண்டு, அப்பெண் இறந்த வீட்டுக்கரையில் பைக்கை மறைக்கிறார்கள். பின்,
வா, வீட்டுக்குள் போகலாம், என அவன் சொன்னான். தனக்கு வேறெந்த வழியுமில்லை என உணர்ந்தவள் சரி என்றாள். இவன் சற்றே தூக்கிக் கொடுக்க உடலை வளைத்து நெளித்து ஒரு மாதிரியாக அந்த ஜன்னலுக்குள்ளால் அவள் உள்ளே சென்றாள். கிட்சன் பொருட்கள் வைக்கும் கட்டு ஒன்றில் இறங்கிய அவள், மீண்டும் பின்னால் திரும்பி அவன் வருவதற்காக பார்த்தாள்.கைகளால் முழு சக்தியையும் கொடுத்து அவன் முழங்கைகளை ஜன்னலுக்குளாக வைத்து அவன் தலை வரை மேலே தூக்கி விட்டான்.
அடுத்த அடி வைத்து அவன் அவள் உள்ளே வந்தான். வந்து இவளிருக்கும் கட்டிலியே இறங்கினான். இருவரும் கைகளில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த கும்மிருட்டு வீட்டுக்குள் தனது போன் டார்ச் லைட்டை ஒன் செய்தாள். கீழே இறங்குவதற்காக கீழே லைட்டை அடித்தபொழுது…
மர்ம வீடு
அந்த இடத்தில் இரத்தம் சொட்டியிருப்பதைக் கண்டாள். வீறிட்டு கத்தப் போனாள்.
சப்...
கையை வைத்து அவள் வாயை பொத்தினான்.
"நாம இருக்க நிலமைல எந்த சத்தமும் போட்ட நாம தப்பிக்க வாய்ய்ப்பே இல்லாம போயிரும். தயவு செஞ்சு கத்தாத..."
"என்னடா இதெல்லாம் ? " இரவு நேரத்துல, கொலை ரெத்தம் னு இவளோ நடக்குது. நேத்து ஒரு பொண்ணு சாகுறா. இன்னைக்கு உயிரோட இருக்களாம். அது நடந்த அதே வீட்டுல நாம இருக்கோம், என்னடா இதெல்லாம் ?" என பற்களை கடித்தபடி கோபத்தில் முனங்கினாள்.
"என்னோட தப்புதான். என்ன தயவு செஞ்சு மன்னிச்சுரு. ஆனா, நான் சொல்றத கேளு, எதுவுமே காரணமில்லாம நடக்கல. எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்கணும். இப்போதைக்கு நாம தப்பிக்கணும். அதான் முக்கியம். அதால தயவு செஞ்சு சத்தம் போடாம வா. இந்த வீட்டுக்குள்ள நமக்கு வெளிய போக ஏதாவது இடமிருக்கனு பார்க்கலாம்."
"என்ன சுத்தி பார்க்கவா ? பைத்தியமா நீ ? இந்த வீட்டுக்குள்ள ஓரு சின்னத்துளி வெளிச்சம் கூட இல்ல. எங்க இருந்து சுத்தி பாக்குறது. நான் வரல"
"சரி நீ இரு. நான் பார்த்துட்டு வாறன்"
திடீரென்று அவன் காதுக்குள் ரீங்கார சத்தம் கேட்டது. கன்னம் சுள்ளென்றது.
தனக்கு அறை விழுந்துள்ளது என உணரவே அவனுக்கு 1 நொடி ஆனது.
"ஒரு செக்கனாவது என்னைவிட்டு கைதூரம் தாண்டி போனா, நான் பேய் ஆகிருவேன் பாத்துக்க"
"ஹேய். அதுக்குன்னு இப்டியாடி அறைவா ? "
"எதும் பேசி என்கிட்ட வாங்கிக்காம, எழும்பு. என்னத்த தேடப்போறியோ, போ. வந்து தொலைறேன்" என வறுகித் தள்ளினாள்.
இருவரும் தமது போன் டார்ச் லைட்டை ஓன் செய்தார்கள். முன்னால் இரத்தம் சிதறிக் கிடந்த இடத்தை தாண்டி காலை வைத்து கீழே இறங்கினார்கள்.
கீழே "தி ஷாக் கம்" (சுவைக்காக மிகவும் புகழ்பெற்ற பபிள்கம்) அதிகளவில் சிதறிக் கிடந்தது. அதனைத் தாண்டி நடந்தார்கள். கிட்சன் முடிகிறது. அந்த இடத்து சுவரைத் தாண்டி வந்ததும் அங்கு ஹால் இருக்கிறது.
அவனது முழங்கையை பிடித்தபடி இவள் பின்னாலேயே செல்கிறாள். இவர்கள் தொலைபேசி வெளிச்சம் உள்ள இடங்களில் மட்டுமே வெளிச்சம் உள்ளது. மற்ற எல்லா இடங்களிலும், கும்மிருள்.
திடீரென அவன் முகத்தில் சுக் என்று எதுவோ கீறுகிறது. உடனடியாக குனிந்தான்.அவளும் பயத்தில் முகத்தை பொத்தி கொள்கிறாள்.
சிறிது நேர மயான அமைதி.
லேசாக கண்களை திறந்து பார்த்தான். தனக்கு ஏதும் ஆகவில்லை. யாருமில்லை. டார்ச்சை மேல்நோக்கி அடித்தான். பேனிலிருந்து தூக்கு கயிறு தொங்கிக் கொண்டு இருக்கிறது.
அவளும் கண்ணை திறந்து பார்த்தாள். யாரோ இந்த இடத்தில் தூங்கி இருக்கிறார்கள் என தெளிவானது.
அவன் மீண்டும் அந்தத் தூக்கு கயிறை உன்னிப்பாக பார்த்தான்.
"என்னடா அதையே பார்த்துட்டு இருக்க ? "
"இல்ல. ஒண்ணுமில்ல சின்ன சந்தேகம்தான். வா, கதவுக்கு பக்கத்துல போகலாம்."
கதவுக்கருகில் செல்வதற்காகவென அவன் கதவுப் பக்கம் மொபைல் வெளிச்சத்தை திருப்பினான். திடீரென கதவுக்கு பக்கத்தில் உள்ள மழுங்கிய ஜன்னல் வழியாக இடது மூலையிலிருந்து வெளிச்சம் தெரிந்தது.
"போன் டார்ச் ஆஹ் நிப்பாட்டு" என பதறினான். "யாரோ வாறாங்க, சீக்கிரம் வா, ஓடி வா" என அவளை இழுத்துக்கொண்டு கதவை விட்டு விலத்தி ஓடினான். திடீரென கால்கள் தடுக்கவும், முன்னால் படிக்கட்டுகள் இருப்பதை உணர்ந்தான். "ஏறு ஏறு, மேல ஏறிவா" என சொன்னபடி, தட்டுத்தடவி, கைப்பிடியை கண்டுபிடித்து, அதைப் பிடித்தபடி மேலே ஏறத்தொடங்கினான். அவளும் தனது போனை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, அவனைத் தொடர்ந்தாள். படியில் ஏறிச் சென்ற இருவரும், அந்த படிகள் முடியும் இடத்தை அடைந்திருந்தனர். அதற்கு நேர் முன்னாள் தவழ்ந்து செல்லத் தொடங்கினர்.
சற்றே சென்றதுமே, லேசாக திறந்திருந்த கதவொன்று இவன் கையில் தட்டுப்பட்டது. அந்தக் கதவை தள்ளி உள்ளே சென்று பதுங்கி கொண்டான். இவளையும் அந்த அறைக்குள் இழுத்து சென்றான். இருவருக்கும் திடீரென வெளிச்சம் தெரிந்தது. அந்த அறையின் ஜன்னல் திறந்து இருந்திருக்கிறது . அதன் வழியாக வெளிச்சம் வருகிறதென புரிந்தது. இருவரும் தவாழ்ந்தபடியே அந்த ஜன்னல் வரை சென்றனர். அங்கிருந்து கீழே எட்டி பார்க்கமுடிந்தது . வீட்டு வாசலில், இவர்களுக்கு நேர் கீழே போலீஸ் வாகனம் நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் பேசுவதற்கு கவனம் கொடுத்தான்.
"有人向巡逻警察开枪并乘坐吉普车逃跑。 昨天还发生了一起谋杀案。 躲在这个墙缝后面,看看有没有人来".(யாரோ ரோந்து போலீசை சுட்டுட்டு ஜீப்பில தப்பிச்சு போய் இருக்காங்க.நேத்தும் ஒரு கொலை நடந்துருக்கு. இந்த சுவர் இடைவெளிக்கு பின்னால ஒளிஞ்சு யாராவது வாராங்களான்னு பாருங்க.)
இவ்வாறு சொன்னபின் உத்தரவிடப்பட்ட போலீஸ் சல்யூட் அடித்து நிற்க, மற்ற போலீஸ் எல்லாம் ஜீப்பில் ஏறி, புறப்பட தயாராவது தெரிந்தது.
"இந்த வீட்டுக்கு போலீஸ் காவல் போடறாங்க. நாம தப்பிக்க வழியே இல்லப் போலருக்கேடா" என அவள் வருந்தினாள் .
அவள் சொல்வதை கேட்டபடியே மண்டைக்குள் பல விடயங்களை ஒட்டிக் கொண்டிருந்தான் இவன். அந்த போலீஸ், ஜீப் சென்றதும் சுவருக்கு பின்னல் மறைவதற்காக சென்றான். இவர்கள் அங்கு போட்டிருந்த பெரிய கதவை தனியாளாக தூக்க தொடங்கினான். இவன் அதனைக் கண்டவுடனேயே, மண்டைக்குள் உறைத்தவனாக சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.
"என்னடா தேடுற ? "
அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல், போன் டார்ச்சை ஒன் செய்து நிலம் முழுதும் தேடினான். அவன் தேடுவது கிடைத்தது. கையில் ஒரு இரும்பு ஜாடி கிடைக்கவும் அதனை எடுத்தான். இந்த அறையை விட்டு எழுந்து, வெளியே சென்று மற்றொரு அறையை நோக்கி ஓடினான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உட்காந்திருந்தவள், எழுந்து அவன் பின்னால் ஓட எத்தனித்தாள். அவள் அணிந்திருந்த ஆடை, அந்த அறையில் நிலத்தில் கிடந்த ஏதோ ஒன்றில் சிக்கி விட்டது. சிறிது முன்னும் பின்னும் நகர்ந்தாள். சிக்கல் எடுபட்டது.
டாங்க்.... டன்....
இரும்புப் பொருளொன்று கீழே அடிபடும் சப்தம் கேட்டது. கீழ் நின்ற போலீஸ் அலறி மயங்கும் சத்தமும் கேட்டது. உடனே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். போலீஸ் ஆபீசரின், தொப்பி இவர்கள் சாத்தி வைத்த கதவுக்கு வெளிப்புறமாக கிடக்கிறது. போலீஸ் ஆபிசரை காணவில்லை. அந்த இடத்தில் தங்கள் பைக்கை நிறுத்தி வைத்தோம் என இப்போதுதான் இவளுக்கு உறைத்தது. போலீஸ் தலைல இரும்பை தூக்கி போட்டுட்டானா ?
ஐயையோ... கொலைகாரனாகிட்டானே. என அவள் நினைக்கும் போதே அவன் அலறும் சப்தமும், இரும்பு சப்தமும் சேர்ந்து கேட்டது. பதறியடித்து, கதவைத் திறந்தபடி, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். அவன் சென்றிருக்கக்கூடும் என இவள் நினைக்கும் அறையை நோக்கி ஓடினாள். பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து டோர்சை அந்த இடத்தை நோக்கி அடித்தாள். ஒரு ஜன்னல் மூலையில் இவன்அரை மயக்கத்தில் கீழே கிடக்கிறான். அவனுக்கு பக்கத்திலேயே ஒரு பெண் வெள்ளை முழுச்சட்டையில், கையில் இரும்பு கூஸாவை பிடித்தபடி தலை விரிகோலமாக நின்று கொண்டிருக்கிறாள். தனக்கு பின்னாலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட அப்பெண் பின்னல் திரும்பி பார்க்கிறாள்.
அவள் கண்ணுக்கெதிரே கையில் மொபைலோடு உடலில் எந்த திராணியுமற்று இவள் நின்று கொண்டிருக்கிறாள்.
மர்மங்கள் தொடரும்.....
