← Library

நொடி · 5

நொடி 5

25 October 2020

என்னது எஸ்பிபி செத்துட்டாரா ??

இதென்ன புதுசா சிவாஜி செத்துட்டாரா என்ற மாதிரி ஆரம்பிச்சிட்டீங்களா ?

வந்துட்டாருய்யா வந்துட்டாரு... இந்த உலகத்தில் இல்லாத எல்லா வேலைகளையும் பிஸியா இருக்க நம்ம எழுத்தாளர் ஐயா வந்துட்டாரு. உங்க பேர் என்னங்கையா, நேத்திரக்கைதியா ?

வேலை முத்தின கைதினு மாத்திக்கிங்க... 😤

கதையை வாசிக்க ஆரம்பிச்சவங்களுக்கு இப்ப என்ன நடந்ததுனே மறந்து இருக்கும்.

அதுவும் கடைசியா என்ன சொல்லிட்டு போனீங்க..

கூடிய சீக்கிரத்தில் நம்முடைய ஹீரோ, ஹீரோயின்,மந்தபுத்தி மற்றும் அவசர புத்தியோடு விரைவில் சந்திக்கிறேன்.

இதுதான் உங்களை கூடிய சீக்கிரமும் விரைவுமா ? விளங்கிடும்...

சரி, சரி, மன்னிச்சுக்கோங்க... உண்மையிலேயே நேரத்தால் கைதுசெய்யப்பட்டு கதை எழுத வாய்ப்பே கிடைக்கல... இப்ப நாம கண்டினியு பண்ணலாமா... 😅

வாசகர்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை தான்... அதனால் நானே சொல்லிவிடுகிறேன். முன்னைய எபிசோட்களில் பேருந்தில் அவள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த பொழுது அவன் வெறுமனே ஹாய் மட்டும் சொன்னதால் கடுப்பாகி அவள் படபடவென்று இவனிடம் என்னென்னமோ பேசி முடித்து விட்டாள். அவள் ஏன் அவ்வாறு பேசினால் என்பதற்கான காரணத்தை நொடி 4 முழுவதுமாக அவசர புத்தியை வைத்து விளங்கப்படுத்தி இருந்தேன். ஹீரோவின் மூளை மந்தபுத்தி; ஹீரோயினின் மூளை அவசர புத்தி.

அவள் அவ்வாறு கடகடவென்று பேசி முடித்தவுடன் அவனது உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பார்ப்பதற்காக அவனை அவள் பார்க்கிறாள். அவன் முகத்தில் புன்னகை, இவள் முகத்திலும் புன்னகை.

அங்கிருந்து கதையைத் தொடர்வோம்.

ஹீரோ - வசனங்கள்

மந்தபுத்தி - வசனங்கள்

ஹீரோயின் - வசனங்கள்

அவசரபுத்தி - வசனங்கள்

நொடி 33

அவ சிரிக்கிறா, அவ சிரிக்கிறா... அடுத்து நான் என்ன சொல்லலாம் ?

யோசிக்கிற வரைக்கும் அப்படியே சிரிப்பை மெயின்டன் பண்ணு ராசா....

இது அவர்களுக்கிடையிலான (ஹீரோ - ஹீரோயின்) முதல் கலந்துரையாடல். அவன் எதிர்பார்த்ததை அவள் பேசவும் இல்லை, அவள் எதிர்பார்த்ததை அவன் பேசவும் இல்லை. பிறகு இருவர் முகத்திலும் திடீரென்று புன்னகை வர காரணம் என்ன என்பதனை அறிந்து, அதற்கேற்றாற்போல பதில் சொல்வதற்காக மந்தபுத்தி பதிலைத் தேடிக் கொண்டிருந்தது. அதே வேளையில் மற்ற பக்கம் அவசர புத்தி,

சிரிக்கிறான் சிரிக்கிறான்... ஐயோ அறிவாளி நீயும் ஏண்டி சிரிக்கிற ? பொம்பள புள்ளக்கு அடக்க ஒடுக்கம் வேணாம்... இப்படியா டக்கு டக்குனு சிரிப்ப ?

அவளுடைய தாய் அவளைத் திட்டிக் கொண்டே இருக்கும் வசனம் இது. அது அப்படியே போய் அவசர புத்தியின் சேமிப்பில் பதிந்துவிட்டது. இப்பொழுது அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை கண்டவுடன் தானாக வெளிவருகிறது.

நொடி 34

ஒரு பொண்ணு சாதாரணமா சிரிக்க மாட்டா..

ஒன்னு, ஏதாவது பிடிச்சிருக்கணும், அல்லது காமெடியா இருந்திருக்கணும், அல்லது அவளுக்கு பழைய விஷயத்தை ஞாபகப்படுத்தி இருக்கணும், அல்லது அவள புகழும் வகையில் இருந்திருக்கணும், அல்லது அவளுடைய ஏதாவது ஒரு வீக்னஸ் தெரியாத்தனமா வெளிவந்து இருக்கணும். இதுல எதுக்காக அவ சிரிச்சா ?

அவ இப்ப அவன்கிட்ட எப்டி பேசுனா ? 👀

- திடுதிப்புனு பேசிட்டா.... அதாவது அவ எதயோ மறைக்க try பண்றா...

இவன்கிட்ட இப்போதைக்கு மறக்கக் கூடிய விஷயம் ஒன்று எதுவும் அவளுக்கு இருக்காது... ஒண்ணே ஒண்ண தவிர : அவளோட அவசரத் தனம்...

மாட்டிகிச்சு... Writer அண்ணாத்த சொன்னார்ல... அவளுடைய புத்தி அவசர புத்தினு ... ஓகே அப்ப அட்வண்டேஜ் நம்ம கைல...💪

மந்த புத்தியை இதற்கு மேலும் அந்த புத்தி என்று சொன்னால் அது பொருந்தாது என்று நினைக்கிறேன்... வெளிப்படையாக மந்தமாக செயற்படுகின்ற ஆண்களின் புத்தி, எப்படியோ தனக்குப் பிடித்த விடயம் என்றால் அதுவும் தனக்குப் பிடித்த பெண்ணுக்காக என்றால் விண்ணையும் மண்ணையும் அளந்து முடித்து விடுகிறது. என்ன ஒரு அனலிசிஸ்... மற்ற பக்கம் நம்முடைய அவசர புத்தி என்ன யோசிக்கிறது என்று பார்ப்போம்...

பையன் சிரிக்கிறான்... இவ சிரிக்க முன்னாடியே அவன் சிரிச்சுட்டானா இல்லை இவ முதல்ல சிரிச்சாளா ? இவதான் முதலில் சிரிச்சி இருக்கா.. பாத்த உடன அவனும் சிரித்து இருக்கான். பையன் வழக்கமான பீசுதான்... இந்த சிரிப்புல எதும் ஸ்பெஷல் இல்ல. ஆனா, நாம இனிமே இவள அதிகம் பேச விடக்கூடாது. அடுத்த அட்டாக் பயங்கரமா இருக்கணும். 😈 இவள நம்ம கண்ட்ரோல்ல வச்சிருக்கணும்.

என்ன ஒரு வில்லத்தனம்.. இப்பத்தான் புரியுது. நம்ம பசங்களை எல்லாம் பொண்ணுங்க ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் அந்த பொண்ணுங்க இல்லை. ஆரம்பத்துல இருந்தே அதுக்குன்னு டிசைன் பண்ணப்பட்ட அவங்களோட புத்திகள் தான் போல..

நொடி 35

அவசரப்புத்தி சிந்தித்துக் கொண்டிருக்கும் விதம் கூடத்தெரியாமல் இந்த உரையாடலின் ஆதிக்கம் தன் கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு மந்த புத்தி இவன் மூளைக்கு ஒரு சிக்னலை அனுப்புகிறது.

- இங்கிருந்து 2 புத்திகளின் கதைகளையும் ஒத்திவைத்துவிட்டு இவர்களின் உரையாடலை பார்ப்போம் -

நொடி 36

அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியுமா ?

எல்லாமே நா ?

அதான் நீங்க சொன்னீங்களே.. அதெல்லாம்..

எதெல்லாம் ?

அந்த, நான், உங்கள , பஸ், நாம ..

எந்த நான் ? என்ன என்ன ? என்ன பஸ் ? கார் ?

அவள் பேசிய முதல் வசனங்களில் சிறிது அதிகாரத் தொனி இருந்ததால் இப்போது அதை மீண்டும் தொடர அவளுக்கு பெரும் வாய்ப்பை கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அவளும் அவசரப் புத்தியுமாக சேர்ந்து நம் ஆண்கள் பக்கத்தை போட்டுத் தாக்கினர்.

அந்த சிக்கலில் இருந்து வெளிவருவதற்கு மந்தபுத்தி விடாமல் யோசித்துக் கொண்டிருந்தது. இதனுடைய தயக்க குணம் மந்தபுத்தியின் முழுமையான திறனை வெளிக்காட்டவிடவில்லை. இவன் உளறிக் கொண்டிருக்கிறான். சரி வராது. எப்படியாவது அவளை மடக்க வேண்டும்.😑

நொடி 37

என்ன எல்லாத்துக்கும் என்ன என்னனு கேக்குறீங்க ?

(வாயாடி அவசரப் புத்தி விடுமா ? )

அஹ் ? என்ன என்ன எல்லாத்துக்கும் என்ன என்னனு கேக்குறீங்க ?

மந்தப்புத்தி யுக்தியை பிடித்து விட்டது.

என்ன அஹ் ? என்ன என்ன எல்லாத்துக்கும் என்ன என்னனு கேக்குறீங்க ?

எல்லா வசனத்துக்கும் முன்னால் "என்ன" பகுதி சேர்த்துக்கொண்டு விளையாடியது இந்த சிறுபிள்ளை புத்திகள். என்னோட இத்தனை வருஷ வாழ்க்கைல யார்னே தெரியாத ரெண்டு பேர் இப்படி உரையாட ஆரம்பித்ததை நான் பார்த்ததேயில்லை.

நொடி 38

எனை தீண்டி விட்டாய், உயிர் தூண்டி விட்டாய்,💓 எனை நானே தொலைத்து விட்டேன்...

இவன் அவளோடு அளவளாவிக் கொண்டு இருக்கும் பொழுது , எங்கோ அடிக்கடி ஒலிக்கும் பாடல் கேட்டு மந்தபுத்தி யோசிக்க ஆரம்பித்தது. உடலில் வேறு ஏதேனும் பாகங்களிலிருந்து உள்ளீடுகள் வருகின்றதா என பார்த்துக் கொண்டிருந்தது. தொடையிலிருந்து ஒரு அதிர்ச்சி உணர்வு வருவதாக சிக்னல் கிடைத்தது.

தெரிந்த பாட்டு.... தொடையில் அதிர்ச்சி... போன் ரிங் அடிக்கிறது... டேய்.. டேய்.. கடல போட்டது போதும் டா போன் எடுடா...

மந்தபுத்தி கொடுத்த இந்த அவசர சிக்னலை ஏற்றுக்கொண்டு அவன் தனது போனை எடுக்க பாக்கெட்டுக்குள் கையை விட்டான்.

அதேவேளையில், பேசிக் கொண்டே இருந்தவன் திடீரென்று பேச்சை நிறுத்தி தன்னுடைய பாக்கெட்டுக்குள் கையை விடுவதைப் பார்த்ததும் அவளது புத்தியும் அவனுக்கு அழைப்பு வந்திருப்பதை சுதாகரித்துக் கொண்டது.

நொடி 39

யார் அழைப்பது என்று பார்க்கின்றான்..

இந்த ஜீவனா ? இவன் எதுக்கு எடுக்கிறான் ?

ஹலோ...

"டேய்... பொறுக்கி, பாக்கணும் பாக்கணும்னு 10 வருஷமா என்ன உயிரெடுத்துட்டு இன்னைக்கு அவ பக்கத்துல உக்காந்து கொஞ்சிக்கிட்டு போற ? ஒரு வார்த்தை சொன்னியாடா துரோகி...."

நொடி 40

இவனுக்கு மண்டை விறைக்க ஆரம்பித்து விட்டது ... இப்போது அவனுக்கு தேவைப்பட்டது எல்லாம் உறுதிப்படுத்தல் மட்டுமே...

என்னடா சொல்ற ? நீ எங்க இருக்க ? யாரைப் பத்தி பேசுற ?

"டேய்... நீ இருக்க அதே பஸ்ல உனக்கு 3 சீட் பின்னாலதான் நான் இருக்கேன். நீ நீல சட்டை, அவளும் நீல சட்டை.. நீ பாக்கணும் பாக்கணுனு அழுதியே அவ உன் பக்கத்துல தான்டா இருக்கா... நீயும் பேசிட்டுதான்ட வாற ?"

நொடி 41

பாவம் மந்தப் புத்தி.. ஒரே நாளில் பல்லாயிரம் அதிர்ச்சிகள். மந்தபுத்திக்கு அவன் சொல்லும் கதையை விட முதலில் அவனுடைய இருப்பை உறுதி செய்வது முக்கியமாக தோன்றியது.

பின்னால் திரும்பிப் பார்த்தான்.

அவன் இருக்கிறான். காதில் போனை வைத்துக் கொண்டு, அதிர்ந்த முகத்துடன் இவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.

பக்கென்றது நெஞ்சுக்குள் . அவன் குறிப்பிடும் நபராக இவள் இருக்க வாய்ப்பே இல்லை.. இவளை இவனுக்கு எப்படித் தெரியும் ? மனதில் பலத்த சந்தேகங்களுடன் அவனைப் பார்த்து " இவளோ ?" என்பது போல தலையை பக்கமாக அசைத்தான் . அவனும் மீண்டும் ஒருமுறை தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.

நொடி 42

அப்படியே தன் பக்கத்திலிருக்கும் தன் ஆசைக்குரிய ஆண்மகன் யாரிடம் என்ன பேசுகிறான் என ஒட்டுக் கேட்டவளுக்கு, யாரோ ஒரு நபரை பற்றி பேசுகிறான் என புரிந்திருந்தது. அவன் தலையை திருப்பி பின்னால் பார்ப்பதை கவனித்த இவளும் மென்மையாக தன்னுடைய தலையை திருப்பி இவன் யாரைப் பார்க்கிறான் எனப் பார்த்தாள்.

இவ்வளவு நேரம் தனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்த முகத்தின் பக்கவாட்டை வைத்து உறுதி செய்த இவன் நண்பனுக்கு இப்போது சந்தேகமே இல்லாமல் உறுதியானது.

நொடி 43

"மச்சான் அவளேதான் டா" - இவளைப் பார்த்தபடியே தொலைபேசியில் அவன் நண்பன்.

அப்படியே தனது பார்வையை அங்கிருந்து விலக்கி இவள் மீது மீண்டும் பதிய வைத்தான் நம் ஹீரோ.. மந்தப் புத்தி நண்பனின் கூற்றை நியாயப்படுத்த / நிராகரிக்க பொருத்தமான காரணங்கள் கிடைக்குமா என அல்லோல கல்லோல பட்டுத் தேடிக் கொண்டிருந்தது.

பக்கவாட்டாக திரும்பிய நிலையில் அவன் அருகில் இவ்வளவு நெருக்கத்தில் அவள் இருந்ததால், முதன் முறையாக இன்றுதான் ஒன்றைக் கவனிக்கின்றான்.

அவள் கழுத்துக்கும் நாடிக்கும் இடையில்,

அந்த சிறிய தழும்பு... 😲

அவளேதான்... 🧠❄️

வழக்கம்போல மந்தப்புத்தியின் நிலை..

அப்போதைக்கு முடிஞ்சு போச்சு ..